lichess.org
நன்கொடையளி

சுவிஸ் போட்டிகள்

தற்பொழுது விளையாடப்படுகிறது
Rapidமூலம் Lichess Swiss4/7 சுற்றுகள்10+0 • துரிதம் • மதிப்பீட்டோடு
63
JBAY CC Friday Tournamentமூலம் Sarah Baartman district chess union 20231/15 சுற்றுகள்3+0 • அதிரடி • மதிப்பீட்டோடு
43
Scc 73thமூலம் Sirajganj Chess Club2/7 சுற்றுகள்3+2 • அதிரடி • மதிப்பீட்டோடு
31
Weekend Kickoff Championshipமூலம் National Chess Blasters7/11 சுற்றுகள்3+2 • அதிரடி • மதிப்பீட்டோடு
29
Daily Rapidமூலம் LiveChess1/7 சுற்றுகள்10+3 • துரிதம் • மதிப்பீட்டோடு
29
விரைவில் தொடங்கும்
Torneo de Junio Chesskoolமூலம் Chesskool Themed Tournaments5 சுற்றுகள்5+2 • அதிரடி • மதிப்பீட்டோடு
9
Elite Daily Blitz 5+0 Championமூலம் Syeda Faiza Elite Chess Club7 சுற்றுகள்5+0 • அதிரடி • மதிப்பீட்டோடு
6
DKமூலம் Onlygms7 சுற்றுகள்10+3 • துரிதம் • மதிப்பீட்டோடு
2
LETS SLOW THINGS DOWNமூலம் CARBON ARENA5 சுற்றுகள்10+5 • துரிதம் • மதிப்பீட்டோடு
2
Bullet Incrementமூலம் Lichess Swiss20 சுற்றுகள்1+1 • Bullet • மதிப்பீட்டோடு
1

(wiki) சுவிஸ் போட்டியில், ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற அனைத்து போட்டியாளர்களையும் விளையாட வேண்டிய அவசியமில்லை. போட்டியாளர்கள் ஒவ்வொரு சுற்றிலும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரே மாதிரியான மதிப்பெண்களுடன் எதிராளிகளை விளையாடுவதை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட விதிகளின் தொகுப்பைப் பயன்படுத்தி ஜோடியாக இணைக்கப்படுகிறார்கள், ஆனால் ஒரே எதிரியை ஒன்றுக்கு மேற்பட்ட முறை அல்ல. வெற்றியாளர் அனைத்து சுற்றுகளிலும் பெறப்பட்ட அதிக மொத்த புள்ளிகளுடன் போட்டியாளர் ஆவார். ஒற்றைப்படை எண்ணிக்கையிலான வீரர்கள் இல்லாவிட்டால் அனைத்து போட்டியாளர்களும் ஒவ்வொரு சுற்றிலும் விளையாடுவார்கள்.

சுவிஸ் போட்டிகளைக் குழு தலைவர்களால் மட்டுமே உருவாக்க முடியும், மேலும் குழு உறுப்பினர்களால் மட்டுமே விளையாட முடியும்.
சுவிஸ் போட்டிகளில் விளையாட ஒரு குழுவில் சேரவும் அல்லது உருவாக்கவும்.

ஒப்பீடுகோதா போட்டிகள்சுவிஸ் போட்டிகள்
போட்டியின் காலம்நிமிடங்களில் முன் வரையறுக்கப்பட்ட காலம்முன் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச சுற்றுகள், ஆனால் கால அளவு தெரியவில்லை
விளையாட்டுகளின் எண்ணிக்கைஒதுக்கப்பட்ட காலத்தில் விளையாடலாம்அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியாக முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டது
இணைத்தல் அமைப்புஒரே மாதிரியான தரவரிசையில் கிடைக்கக்கூடிய எந்த எதிரியும்புள்ளிகள் மற்றும் சமன்முறி ஆட்டங்களின் அடிப்படையில் சிறந்த இணைத்தல்
இணைத்தல் நேரம் காத்திருப்புவேகமாக: எல்லா வீரர்களுக்கும் காத்திருக்காதுமெதுவாக: அனைத்து வீரர்களுக்கும் காத்திருக்கிறது
ஒரே மாதிரியான இணைத்தல்சாத்தியம், ஆனால் தொடர்ச்சியாக இல்லைதடை செய்யப்பட்டுள்ளது
தாமதமாகச் சேர்தல்சரிஆம் பாதிக்கு மேல் சுற்றுகள் தொடங்கும் வரை
Pauseசரிஆம் ஆனால் சுற்றுகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்
தொடர் மற்றும் மூர்க்கம்சரிவேண்டா
OTB போட்டிகளைப் போன்றதுவேண்டாசரி
வரம்பற்ற மற்றும் இலவசம்சரிசரி
?

களங்களுக்குப் பதிலாகச் சுவிஸ் போட்டிகளை எப்போது பயன்படுத்த வேண்டும்?சுவிஸ் போட்டியில், அனைத்து பங்கேற்பாளர்களும் ஒரே எண்ணிக்கையிலான ஆட்டங்களை விளையாடுகிறார்கள், மேலும் ஒருவருக்கொருவர் ஒருமுறை மட்டுமே விளையாட முடியும்.
சங்கங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ போட்டிகளுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

?

புள்ளிகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?ஒரு வெற்றி ஒரு புள்ளி மதிப்புடையது, ஒரு சமநிலை ஒரு அரை புள்ளி, மற்றும் தோல்வி பூச்சியம் புள்ளிகள்.
ஒரு சுற்றின்போது ஒரு வீரரை ஜோடி சேர்க்க முடியாதபோது, அவர்கள் ஒரு புள்ளி மதிப்புடன் அடுத்த சுற்றில் இடம் பெறுவார்கள்.

?

போட்டி சமநிலை தடை எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?Sonneborn-Berger மதிப்பெண் உடன்.
வீரர் வெற்றி கொள்ளும் ஒவ்வொரு எதிராளியின் மதிப்பெண்ணையும் மற்றும் சமன் செய்த ஒவ்வொரு எதிராளியின் மதிப்பெண்ணில் பாதியையும் சேர்க்கவும்.

?

எவ்வாறு இணைத்தல் செயல்படுகிறது?டச்சு அமைப்பு உடன், FIDE கையேடுக்கு இணங்க, bbPairings ஆல் செயல்படுத்தப்பட்டது.

?

போட்டியில் வீரர்களைவிட அதிக சுற்றுகள் இருந்தால் என்ன நடக்கும்?சாத்தியமான அனைத்து ஜோடிகளும் விளையாடியதும், போட்டி முடிவடைந்து வெற்றியாளர் அறிவிக்கப்படும்.

?

இது ஏன் அணிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டது?சுவிஸ் போட்டிகள் நிகல்நிலை சதுரங்கத்திற்காக வடிவமைக்கப்படவில்லை. அவர்கள் வீரர்களிடமிருந்து நேரம் தவறாமை, அர்ப்பணிப்பு மற்றும் பொறுமையைக் கோருகின்றனர்.
இந்த நிலைமைகள் உலகளாவிய போட்டிகளைவிட ஒரு குழுவிற்குள் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று நாங்கள் நினைக்கிறோம்.

?

ஒரு வீரர் எத்தனை முறை அடுத்த சுற்றிற்கு கடத்த முடியும்(byes) பெற முடியும்?ஒவ்வொரு முறையும் இணைத்தல் அமைப்பால் அவருக்கான ஜோடியைக் கண்டுபிடிக்க முடியாத ஒவ்வொரு முறையும் ஒரு வீரர் ஒரு புள்ளியிலிருந்து விடை பெறுகிறார்.
கூடுதலாக, ஒரு ஆட்டக்காரர் ஒரு போட்டியில் தாமதமாகச் சேரும்போது அரைப் புள்ளியுடன் அடுத்த சுற்றுக்குக் கடத்தப்படுவார்.

?

ஆரம்பகட்ட சமநிலையினால் என்னல் என்ன நடக்கும்?சுவிஸ் விளையாட்டுகளில், வீரர்கள் 30 நகர்வுகள் விளையாடுவதற்கு முன்பு சமன் செய்துகொள்ள முடியாது. இந்த நடவடிக்கையால் முன் ஏற்பாடு செய்யப்பட்ட சமனிலைகளை தடுக்க முடியாது என்றாலும், குறைந்தபட்சம் வெளியேறும்போது ஒரு சமநிலையை ஒப்பந்தத்தை இது கடினமாக்குகிறது.

?

ஒரு வீரர் விளையாட்டை விளையாடவில்லை என்றால் என்ன நடக்கும்?அவர்களின் கடிகாரம் ஓடும், அவர்கள் நேரம் இல்லாமல் போவார்கள் மற்றும் விளையாட்டை இழக்கிறார்கள்.
பின்னர் போட்டி அமைப்பிலிருந்து வீரர் வெளியேற்றப்படுவார், அதனால் அவர்கள் அதிக விளையாட்டுகளை இழக்க மாட்டார்கள்.
அவர்கள் எந்த நேரத்திலும் போட்டியில் மீண்டும் சேரலாம்.

?

நிகழ்ச்சிகள் இல்லாதது தொடர்பாக என்ன செய்யப்படுகிறது?சுவிஸ் நிகழ்வுகளுக்கு பதிவு செய்யும் வீரர்கள் ஆனால் தங்கள் ஆட்டங்களை விளையாடாதவர்கள் சிக்கலாக இருக்கலாம்.
இந்தச் சிக்கலைத் தணிக்க, ஒரு ஆட்டத்தை விளையாடத் தவறிய வீரர்களை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு புதிய சுவிஸ் நிகழ்வில் சேர்வதை லிசெஸ் தடுக்கும்.
சுவிஸ் நிகழ்வை உருவாக்கியவர் அவர்களை எப்படியும் நிகழ்வில் சேர அனுமதிக்கலாம்.

?

வீரர்கள் தாமதமாகச் சேர முடியுமா?ஆம், பாதிக்கும் மேற்பட்ட சுற்றுகள் தொடங்கும் வரை; எடுத்துக்காட்டாக, 11-சுற்றுகள் சுவிஸ்ஸில், வீரர்கள் சுற்று 6 தொடங்குவதற்கு முன்பும், 7-வது சுற்று தொடங்குவதற்கு முன்பு 12-சுற்றுகளிலும் சேரலாம்.
தாமதமாகச் சேருபவர்கள் பல சுற்றுகளைத் தவறவிட்டாலும், ஒரு சுற்று கடத்தபடுவார்கள்.

?

சுவிஸ், கோதா போட்டிகளை மாற்றுமா?இல்லை. அவை நிரப்பு அம்சங்கள்.

?

தொடர் சுழல்முறை பற்றி என்ன?நாங்கள் அதைச் சேர்க்க விரும்புகிறோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக தொடர் சுழல்முறை நிகல்நிலையில் வேலை செய்யவில்லை.
காரணம், போட்டியிலிருந்து முன்கூட்டியே வெளியேறும் நபர்களைக் கையாள்வதில் நியாயமான வழி இல்லை. ஆன்லைன் நிகழ்வில் அனைத்து வீரர்களும் தங்கள் அனைத்து ஆட்டங்களையும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இது நடக்காது, இதன் விளைவாக பெரும்பாலான தொடர் சுழல்முறை போட்டிகள் குறைபாடுள்ளதாகவும் நியாயமற்றதாகவும் இருக்கும், இது இருப்பதற்கான காரணத்தையே தோற்கடிக்கிறது.
தொடர் சுழல்முறைக்கு நிகல்நிலையில் நீங்கள் நெருங்கி வரக்கூடியது, அதிக எண்ணிக்கையிலான சுற்றுகளுடன் சுவிஸ் போட்டியை விளையாடுவதாகும். போட்டி முடிவதற்குள் சாத்தியமான அனைத்து ஜோடிகளும் விளையாடப்படும்.

?

மற்ற போட்டி அமைப்புகளைப் பற்றி என்ன?தற்சமயம் லிசெஸ்க்கு அதிகமான போட்டி அமைப்புகளைச் சேர்க்க நாங்கள் திட்டமிடவில்லை.